Saturday, October 17, 2026
-- Advertisement--

சேப்பாக்கம் தயாராகிறது.. தோனியின் கம்பேக் நடக்குமா?

நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடனான ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) விளையாடுகிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் சிஎஸ்கே அணி விளையாடும் கடைசி ஆட்டமாக அமைந்துள்ளது. இதில் தோனி களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சிஎஸ்கே அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள இரண்டு லீக் ஆட்டத்திலும் சிஎஸ்கே வெற்றி பெற வேண்டிய அவசியம் உள்ளது. அப்போதுதான் அடுத்த சுற்றுக்கு சிஎஸ்கே முன்னேறும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, இந்த சீசனில் இதுவரை களமிறங்கவில்லை. அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்தது கடந்த 2021-ல் சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்ற போது சென்னையில் நடைபெற்ற வெற்றி விழாவில் தனது கடைசி ஆட்டம் சேப்பாக்கத்தில் தான் இருக்கும் என்றார்.

 அந்த வகையில் ‘இன்று நடைபெறும் ஆட்டம் தோனியின் கடைசி ஆட்டமாக இருக்குமா?’ என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கே மற்றும் தோனி ரசிகர்கள், ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கான விடையை தோனி தருவார் என நம்புவோம்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles