covid -19 கோரத்தாண்டவம் ஆடி வரும் சென்னையில் புதிய கமிஷனராக பொறுப்பேற்று உள்ளார் மகேஷ்குமார் அகர்வால். இவரிடம் முன்னாள் போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் முறைப்படி அவரது பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்து விடைபெற்றார். இதன்பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மகேஷ்குமார் அகர்வால் கூறியதாவது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த முதல்வருக்கு நன்றி, சென்னை பொது மக்களுக்கு சேவை செய்ய நான் விரும்புகிறேன். சென்னை காவல் துறையில் சுமார் 20 ஆயிரம் போலீசார் மற்றும் அதிகாரிகள் பணிபுரிகிறார்கள்.
போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்காக பொதுமக்கள் தங்கள் குறைகளை வீடியோ கால் மூலமாக என்னிடம் சொல்ல ஏற்பாடுகள் செய்ய உள்ளேன், என்று அவர் கூறியுள்ளார். பொதுமக்கள் தற்போது கமிஷனர் அலுவலகம் வருவது சிரமம். எனவே தினமும் இரண்டு அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வீடியோ கால் மூலமாக பொதுமக்கள் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார். அவர்கள் கூறும் குறைகளுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் அந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம் எனவும் சமூக இடைவெளியை பின்பற்றுவதும், அத்தியாவசியம் என்றும் அவர் கூறியுள்ளார் காரணமில்லாமல் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் படியும் அவர்களை கேட்டுள்ளார்.