உலகெங்கும் ஆட்டிப்படைத்து வரும் கொரானா தற்பொழுது இந்தியாவில் அதன் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தற்பொழுது உலகளவில் இரண்டாவது இடத்திலுள்ள இந்தியா தமிழகத்தில் பெரும்பான்மையான தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் தொற்று அதிகம் உள்ள மாவட்டமாக கருதப்படும் சென்னையில் அவற்றை கட்டுப்படுத்த சுகாதார துறை செயலாளராக நியமிக்கப் பட்டவர் ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் பல பேரிடர் காலங்களில் இவர் அந்த இடத்தில் தலைமை பொறுப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரம் பாராது மக்களுக்குத் தொண்டாற்றி வந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்திலும் தற்பொழுது கொரானா வந்துள்ளது. அவரது மாமனார் மாமியாருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கும் தொற்று உள்ளதா என சோதனை நடத்தப்பட்டது.
ராதா கிருஷ்ணனின் மனைவி மற்றும் மகனுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ராதாகிருஷ்ணனும் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்தி உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சுகாதார துறை செயலாளரான ராதாகிருஷ்னன் வீட்டில் கொரானா வந்துள்ளது தமிழ் மக்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.