சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை ஸ்டாலின் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த எலும்பியல் மருத்துவர் கண்ணன். தமிழகத்தில் கொரானா நோயை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்த சூழலில் நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் மக்களை பாதுகாக்க உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த முதலாம் ஆண்டு எலும்பு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சை முதுநிலை மருத்துவ மாணவர்கள் இன்று காலை 5 மணி அளவில் ஸ்டாலின் மருத்துவமனை கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தற்கொலைக்கு காரணம் பணிச்சுமை அல்லது வேறு ஏதாவது காரணமா என்று விசாரணை நடைபெற்று வருகின்றது. இவர் நேற்று இரவு வரையிலும் கொரானா வார்டில் பணியில் பணி செய்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
