கொரோனா கிருமித் தொற்றால் மக்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த மூதாட்டியான கஸ்தூரி அவர்களுக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் கே.கே நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று இரவு திடீரென பாட்டி காணாமல் போய்விட்டார் இதனை அறிந்த மருத்துவமனை நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அங்கிருந்து தப்பித்த அந்த பாட்டி ஆட்டோ ஒன்றை பிடித்து நெய்வேலியில் உள்ள தன் மகள் வீட்டுக்கு சென்று உள்ளார். ஆனால் அதற்கு முன்பு ஆட்டோ டிரைவரின் மொபைலில் இருந்து மகளுக்கு போன் செய்து தான் வருவதை தெரிவித்துள்ளார். அந்த நிலை அந்த நேரத்தில் மருத்துவமனையில் பதிவேட்டிலிருந்து கஸ்தூரி பாட்டி மகள் க்கு போலீசார் போன் செய்து விசாரித்தபோது பாட்டி ஆட்டோவில் எங்க வீட்டுக்கு வருவதாக போலீசாரிடம் கூறியுள்ளார்.
தகவல் அறிந்த போலீசார் உடனடியாக ஆட்டோ டிரைவருக்கு போன் செய்து பேசியபோது போலீஸார் பாடியை திரும்பவும் சென்னை கொண்டு வர சொல்லியுள்ளனர். இதனால் திண்டிவனம் வரை சென்றிருந்த நிலையில் ஆட்டோவை மீண்டும் சென்னைக்கு திருப்பியுள்ளார் டிரைவர். இதில் உஷாரான பாட்டி தப்பிக்க முயன்ற பொது போலீசார் பிடித்து உயிருக்கு ஒன்றும் ஆகாது என்று ஆறுதல் கூறி அவர்களை மீண்டும் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் மிகவும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.