பொதுவாக விளையாட்டு என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் உலக புகழ் பெற்ற விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. இந்த விளையாட்டை மையமாக கொண்டு சாதாரண மனிதர்களில் கிரிக்கெட் மீதான மோகம் எப்படி உள்ளது என்பதை எதார்த்தமாக வெளிப்படுத்திய படம் சென்னை 28 .

இப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இப்படத்தில் ஜெய், பிரேம் ஜி, வைபவ், ஷிவா, விஜயலட்சுமி போன்ற பலரும் நடித்து இருந்தனர். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இப்படமும் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து இப்படத்தின் 3 ஆம் பாகத்தில் நடிக்க நடிகர் விஷ்ணு விஷால் இயக்குனர் வெங்கட்டிடம் கேட்டுள்ளதாகவும் அதற்கு இயக்குனரும் முழு சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
