கேப்டன் விஜயகாந்த் நல்ல மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. விஜயகாந்த் வடிவேலு இருவரும் நல்ல ஒரு நட்புடன் பழகி வந்தார்கள். பல வருடங்களுக்கு முன் ஒரு சில பிரச்சனைகளால் விஜயகாந்தை தாக்கி பேசினார் வடிவேலு.
இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேப்டன் மகன் ஷண்முகப்பாண்டியனிடம் கேட்டதற்கு ” நாங்கள் வடிவேலு அவர்களை மாமா என்ற ஸ்தானத்தில் பார்ப்போம். அப்பா அவரை பெரிய ஆளாக்கினார் சினிமால வடிவேலு சார் Talent அதனால தான் இவளோ பெரிய ஸ்டாரா வந்துருக்காரு ஆன அப்பாவை பத்தி தேவை இல்லாம அவர் சில இது பேசியது அப்பாவுக்கும் வருத்தமா இருந்துருக்கலாம் அந்த நேரத்துல ஆனா அப்பா எப்போ கவலையா இருப்பாரோ அப்போ வடிவேல் சார் காமெடி போட்டு தான் உக்காந்து இருப்பாரு சிரிப்பாரு.
என் படத்திற்கு அவரை போடலானு அப்பா தான் சொன்னாங்க நல்லா இருக்கும்னு சொன்னாரு. வடிவேலு சார் பிரச்சனை பற்றி அப்பா பெருசா எடுத்து கொள்ளவில்லை. அம்மாவிடம் கூட விடு எதோ அப்போ பேசிட்டாரு” என்று கூறினார்.