Saturday, April 20, 2024
-- Advertisement--

கேன்சரை 100% குணமாக்கும் மருந்து கண்டுபிடிப்பு..!!! வெளியான செம குட் நியூஸ்…!!!

கேன்சர் மனித இறப்பில் அதிக பங்கு கொண்ட நோய் . கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகளில் மருத்துவர்கள் மும்முரமாக முயற்சி செய்து வந்தனர் ஆனால் கடைசிவரை கேன்சருக்கு சரியான மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை பல மருந்துகள் கண்டுபிடித்து வந்தாலும் அது சோதனையில் தோல்வி அடைந்து வந்தது தொடர்ந்து கேன்சருக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் இறங்கியுள்ள இந்த நேரத்தில் அமெரிக்காவின் மேன்ஹட்டானில் உள்ள Memorial Sloan Kettering Cancer Center மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வெற்றி பெற்று உள்ளது.

சமீப காலமாக கேன்சரால் மக்கள் இறந்து வரும் நிலை அதிகமாகி வருவதால் தீவிரமாக இறங்கி மக்களை காப்பாற்றுவதற்காக விஞ்ஞானிகள் மருந்தினை கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை கேன்சருக்கு கீமோதெரபி மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. என்ன தான் சிகிச்சை வழங்கினாலும் கீமோதெரபி சிகிச்சை கொடுத்த பின் சில பக்க விளைவுகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருந்தது.

தற்போது அமெரிக்காவில் உள்ள கேன்சர் மருத்துவமனையில் DOSTARLIMAB என்ற மலக்குடல் புற்று நோய்க்கான மருந்து சோதனை செய்து வந்தனர். கேன்சரால் பாதிக்கப்பட்ட மற்றும் குணமடைய வராமல் தவித்து வந்த 18 பேரை அழைத்து வந்து சோதனை மருந்து கொடுத்து உள்ளனர்.

மருந்து கொடுத்த பின் உடலில் உள்ள கேன்சர் செல்லை அளித்துள்ளது. சில மாதங்கள் கழித்து அனைத்து டெஸ்ட் எடுத்த பின்னும் கேன்சர் செல் இல்லாதது இவர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது.

கேன்சருக்கு மருந்து கண்டுபிடித்த சந்தோசத்தில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். இந்த மருந்து மோசமான நிலையில் இருந்தவர்களை கூட குணமாக்கி உள்ளதாகவும் இந்திய மதிப்பிற்கு இந்த சிகிச்சை எடுக்க 9 லட்சம் வரை ஆகலாம் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்களில் பயன்பாட்டிற்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வந்து உள்ளது.

\

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles