Sunday, September 6, 2026
-- Advertisement--

“பவுலிங் திட்டங்கள் சரியாக செயல்படவில்லை” – வருத்தம் தெரிவித்த பஞ்சாப் கேப்டன்

ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் இரவு தரம்சாலாவில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் டெல்லி கேப்​பிடல்ஸ் அணி​யிடம் 3 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது பஞ்சாப் கிங்ஸ் அணி. இந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 210 ரன்​கள் குவித்​தது.

அதி​கபட்​ச​மாக கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 36 பந்​தகளில், 3 சிக்ஸர்கள், 5 பவுண்​டரி​களு​டன் 59 ரன்​களும், பிரியன்ஷ் ஆர்யா 33 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 2 பவுண்​டரி​களு​டன் 56 ரன்​களும் விளாசினர். 211 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ஓவர்​களில் 7 விக்​கெட்​கள் இழப்​புக்கு 216 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

நான் எப்​போதும் சொல்​வது போல், ஒரு புதிய பேட்​ஸ்​மேன் களம் இறங்​கும்​போது ஹார்டு லென்த்​தில் வீசுவது​தான் சிறந்த பந்துவீச்சு. அதை அடிப்​பது எளிதல்ல, ஏனென்​றால் அதே போன்ற பந்​துகளை தொடர்ந்து வீசும்​போது, ஒரு பந்​தாவது பேட்​ஸ்​மேனை தவறான ஷாட் விளை​யாடத் தூண்​டும். அதன் மூலம் விக்​கெட் கிடைக்க வாய்ப்​புள்​ளது. அந்த வகை​யில் திட்​ட​மிடு​வ​தில் நாங்கள் பின்​தங்​கி​யிருக்​கிறோம்​. இவ்​வாறு ஸ்ரேயஸ்​ ஐயர்​ கூறினார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles