தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும், அரசியல் களத்தில் திமுகவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும் பிரபலமான போஸ் வெங்கட் சமீப காலமாக அளித்து வரும் பேட்டிகள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, தமிழக அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், இளைஞர்களின் வாக்கு மனநிலை, திமுகவின் தேர்தல் தோல்வி மற்றும் தலைமையிலான புதிய அரசியல் அலை குறித்து அவர் வெளிப்படையாக பேசி வருவது சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஏற்கனவே திமுகவின் தோல்விக்கான காரணங்கள் குறித்து பேசியிருந்த போஸ் வெங்கட், தற்போது GEN Z தலைமுறையினரை கவர்வது தொடர்பாக கூறிய கருத்துகள் மீண்டும் வைரலாகி வருகின்றன.அந்த பேட்டியில் பேசிய போஸ் வெங்கட், “விஜய் அரசியலுக்குள் வந்த விதத்தை யாரும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பாக GEN Z தலைமுறையினரின் மனநிலையை அவர் சரியாக புரிந்துகொண்டார்.
சமூக வலைதளங்கள், குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களை பயன்படுத்தி இளைஞர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டார் என்று விமர்சித்து விட்டு அதே நாமும் செய்யக்கூடாது என்று ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்
விஜயின் அணுகுமுறையைப் பற்றி பேசிய அவர், அதையே திமுக காப்பி செய்ய முயற்சிப்பது சரியான வழி அல்ல என்ற கருத்தையும் முன்வைத்தார். அதேபோல், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தனது வீட்டிலேயே தன்னை கலாய்த்ததாக கூறியிருந்த போஸ் வெங்கட், தனது மகள் கூட “18 வயது ஆகியிருந்தால் நானும் விஜய்க்குத்தான் ஓட்டு போட்டிருப்பேன்” என்று கூறியதாக பகிர்ந்திருந்தார். அந்த கருத்தும் அப்போது சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது.
அரசியலில் இருக்கும் ஒருவராக இருந்தாலும், தன் கட்சி குறித்த விமர்சனங்களையும் வெளிப்படையாக பகிர்ந்து வருவது போஸ் வெங்கட்டின் பேட்டிகளை கவனிக்க வைக்கிறது. குறிப்பாக, “விஜய் GEN Z-ஐ கவர் பண்ணிட்டார்; அதையே காப்பி அடிப்பது தீர்வு அல்ல” என்ற அவரது கருத்து தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.










