பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பெட்ரோல் டீசல் விலை வரியை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை மாநில அரசு வரியை கட்டாயம் குறைத்தாக வேண்டும்.
மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை இரண்டு தடவை வாக்குறுதி கொடுக்காமலே நிறைவேற்றி உள்ளது தற்பொழுது மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்த பின்னும் மாநில அரசு வரியை குறைக்காததை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கோட்டையை நோக்கி செல்லப் போகின்றோம் என்ற தகவல் கிடைத்தவுடன் முதலமைச்சர் அவர்கள் டெல்டா மாவட்டத்திற்கு எஸ்கேப் ஆகிவிட்டார் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
இதற்கு முன்பு பேசிய அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவின் எழுச்சி தொடங்கிவிட்டது அமைச்சர்கள் தப்பித்தவறி பேசும் ஆங்கிலத்தை பார்க்க பயமாக உள்ளது முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசிய ஆங்கிலத்தில் பார்த்து பிரதமர் பயந்து போய் விட்டார் உண்மைதான் பிரதமர் மட்டுமல்ல தமிழகமே பயந்து விட்டது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் குறித்து இப்படி பேசலாமா என்று அண்ணமாலை அவர்களுக்கு பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.