லாஸ்லியா இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து வந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சக போட்டியாளராக கலந்து கொண்ட கவினை காதலித்து வந்தார் லாஸ்லியா. கவின் லாஸ்லியாவின் நெருக்கம் மீடியாக்களுக்கு கன்டென்ட் ஆக மாறியது. கவின் லாஸ்லியாவை பார்த்து அடியே லாஸ்லியாஎன்று பாடல்கள் எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாடினார் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்ததும் அவரவர் அவரது வேலைகளை பார்க்க ஆரம்பித்தார்கள்.

கவின் தான் அடுத்தடுத்து நடிக்கும் படங்களில் பிஸியாக இருந்தார். லாஸ்லியாவிற்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தொடர்ந்து வந்தது. ஆரம்பத்தில் லாஸ்லியாவிற்கு கிடைத்த பிரபலத்தால் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்த பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு லாஸ்லியாவிற்கு கிடைத்தது அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் கூகுள் குட்டப்பா என்ற படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் லாஸ்லியா. அந்தப் படமும் பெரிய தோல்வியை சந்தித்தது.

லாஸ்லியாவிற்கு அடுத்தடுத்து படங்கள் கொடுக்க தயாராக இருந்த தயாரிப்பாளர்களே பின் வாங்கினார்கள்.

பிரபலம் அடைந்தால் ஹீரோயின் ஆகிவிடலாம் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்பதெல்லாம் பொய் மக்கள் மனதில் ஒரு நீங்காத இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து அதற்கு தன்னால் முடிந்தவரை அனைவரையும் கவரும் படி நடித்தாலே போதும் நிச்சயம் கருப்பாக இருந்தாலும் சரி சிவப்பாக இருந்தாலும் சரி மக்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால் லாஸ்லியா நடிப்பும் சுமாராக இருப்பதாலும் அவர் தேர்ந்தெடுத்து முந்தைய படங்கள் கொடுத்தது ரிசல்ட் இன்று பட வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார்.

இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் லாஸ்லியா யோகா செய்யும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து சீக்கிரம் நடிக்க வாங்க என்று கூறி வருகின்றனர்.
மறுபடியும் தன்னை மாற்றிக்கொண்டு சினிமா களத்தில் இறங்கி வெற்றி காண்பாரா லாஸ்லியா பார்ப்போம்.