Friday, October 16, 2026
-- Advertisement--

Biggboss Kavin Wedding: DADA நாயகனுக்கு டும் டும் டும். யார் மணப்பெண் தெரியுமா?

Actor Kavin திருமணம் வெளியான தகவல் இதோ:

சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரையில் ஹீரோ அவதாரம் எடுத்த ஒரு சிலர் தான் நிலைத்து நிற்கிறார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயனை தொடர்ந்து கவின் ஹீரோவாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து உள்ளார்.

சின்னத்திரை டு சினிமா:

Kavin in netru indru nalai uncredited role

சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து மக்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்த கவின் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதியின் பீட்சா திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று இன்று நாளை படத்திலும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நட்புன்னா என்னானே தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான கவினுக்கு அந்தப் படம் பெரிதாக கை கொடுக்கவில்லை.

லிப்ட் டாடா தொடர் வெற்றி:

கவின் நடித்த லிப்ட் திரைப்படம் OTT தளத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது. லிப்ட் திரைப்படத்திற்கு பிறகு திரைக்கு வர இருக்கும் படம் மக்களை கவர்ந்ததாக இருக்க வேண்டும் என்று கவனமாக இருந்த கவின் டாடா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல திரைப்படத்தை பார்த்து திருப்தி சினிமா ரசிகர்களுக்கு கொடுத்தது .

நயன்தாரா விக்கி தயாரிப்பில் கவின்:

தொடர் வெற்றிகளை கொடுத்து வந்த கவின் தற்பொழுது ஊர் குருவி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கவின் ஊர் குருவி ரிலீஸ்க்கு பிறகு முன்னணி இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்து உள்ளது.

கவினுக்கு டும் டும் டும்:

கவினுக்கு வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி அவருடைய காதலியான மோனிஷாவுடன் திருமணம் நடக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அப்போ லொஸ்லியா கிடையாதா எது எப்படியோ வாழ்த்துக்கள் கவின்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles