தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்களைக் கொண்ட ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் புதிய சீசனுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடந்த சீசன் நிறைவடைந்ததிலிருந்தே 10வது சீசன் எப்போது தொடங்கும் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, பிக்பாஸ் தமிழ் 10வது சீசன் இந்த ஆண்டு பிக்பாஸின் 10வது சீசன், செப்டமபர் 6ஆம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், போட்டியாளர்களைத் தேர்வு செய்யும் செயல்முறையும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்கள், போட்டியாளர்கள் யார் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், வழக்கம்போல் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் இதில் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது.
பிக்பாஸ் 10 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை என்பதால், ரசிகர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.










