சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். விஜய் டிவியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியானது. முதல் சீஸனிலே பெரிய எதிர்பார்ப்பையும் பெரிய வரவேற்பையும் பெற்றது இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியின் முதல் சிறப்பே உலக நாயகன் கமல் தொகுத்து வழங்குவதுதான். இவர் தொகுத்து வழங்குவதற்கு ஆகவே பலர் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆரம்பித்தனர். மேலும் இதில் பங்குபெறும் போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக நூறு நாட்கள் கொண்டு செல்கின்றனர்.
இதனால் உலக அளவில் இந்த நிகழ்ச்சி மிகவும் ஃபேமஸ். இந்நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்தது. அதிலுள்ள போட்டியாளர்கள் பிரபல நட்சத்திரங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 தொடங்க உள்ளது. இதில் யார் யார் போட்டியாளர்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று விஜய் டிவி அறிவித்துள்ளது. ஆனால் தற்போது கொரனோ காரணமாக சற்று தாமதமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்றும், இதில் பங்கு பெறுவோர் கொரானோ
சோதனை உறுதி செய்யப்பட்ட பிறகே இதில் பங்கு பெறுவர் என்றும், கிருமித் தொற்று பரவாமல் இருக்க பல விதிமுறைகள் இந்தப் போட்டியில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சீசனில் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.