ஜல்லிக்கட்டு என்ற போராட்டத்தில் தனி ஒரு பெண்ணாக நின்று துணிச்சலுடன் போராடி மக்கள் மனதில் வீர தமிழச்சியாக இடம் பெற்றவர் ஜூலி. இவர் சாதாரண நடுத்தரக் குடும்பத்து பெண்ணாக இருந்தாலும் அந்தப் போராட்டத்தின் மூலமாக ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்த பலத்தை பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 1 பங்கு பெற்ற 16 நட்சத்திரங்களில் இவர் மட்டும்தான் பின்புறம் எதுவும் இல்லாத ஒரு சாதாரண பெண் .ஆனால் வந்து ஒரு சில வாரங்களிலேயே தன் வாயால் இவர் தன் வாழ்க்கையை கெடுத்துக்கொண்டு அதன் பிறகு இவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் பொய்யாகவே இருக்கும் என்று பலரும் நம்பினர். அதன்பின் இந்த சீசன் முடிந்து தற்போது மூன்று சீசன்களும் முடிவடைந்த நிலையிலும் இவரை கலாய்ப்பது மற்றும் குறையவே இல்லை.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஜூலி தனது புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதை கலாய்ப்பது ரசிகர்களும் வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் சமீபகாலமாக ஜூலி மிகவும் கவர்ச்சியான உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதை பார்த்து பலரும் சினிமாவிற்கு அடிப் போடுகிறார் என்று கேட்டு வருகின்றனர். சமீபத்தில் கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதுவும் பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.










