பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கு பெற்றவர் தர்ஷன். இவர் இலங்கை நாட்டில் பிறந்தாலும் வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். இவரின் தாயார் இவரை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார் என பலமுறை இந்த சீசனில் அவர் கூறியுள்ளார். மேலும் தன் வாழ்வில் ஒருமுறை கூட வெற்றியை ருசித்தது இல்லை எனவும் தன் சக போட்டியாளர் இடம் தர்ஷன் குறிப்பிட்டுள்ளார்.
இப்போட்டியில் பங்குபெறும் சக போட்டியாளர்கள் தான் இந்த சீசன் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணினர். அந்த அளவிற்கு தர்ஷன் மக்களிடையே மட்டுமின்றி சக போட்டியாளர்கள் இடம் நல்ல பெயர் வாங்கி இருந்தார். ஆனால் வாங்கிய நல்ல பெயர் கெட்டுப் போகும் அளவிற்கு இவர் தன் முன்னாள் காதலியான சனம் ஷெட்டியை பிரேக்கப் செய்தபிறகு நிறைய சர்ச்சைகளில் சிக்கினார்.
சனம் ஷெட்டியை காதலிப்பதாக காதலித்து திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றியதாக சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து தன் மீது நிறைய குற்றங்கள் வெளிவந்தன இந்நிலையில்
அந்தப் பிரச்சினையிலிருந்து முழுவதுமாக வெளிவந்துள்ள தர்ஷன், தனது கேரியரில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்கு முதல் படம் கிடைத்துள்ளது. இதில் புதுமுக இயக்குனர் ஒருவரின் படத்தில் ஹீரோவாக நடித்த முதல் படத்திலேயே தமிழ் நாட்டின் ராக்ஸ்டார் எனக் கருதப்படும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மேலும் இப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் சார்பாக கருணாமூர்த்தி தயாரிக்கிறார். ஊரடங்கு முடிந்தபிறகு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இப்படம் வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.