சாந்தனு பாக்யராஜ் இவர் சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர். இவர் தளபதி விஜயின் தீவிரமான ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. கீர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சாந்தனும் தளபதி விஜய் தாலி எடுத்து கொடுக்க சொல்லி அடம்பிடித்து திருமணம் செய்து கொண்டார். அந்த அளவிற்கு விஜயின் மேல் மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார் சாந்தனு.
சமீபத்தில் அவருடைய படங்கள் பெரிய அளவில் ஓடவில்லை என்பதை அறிந்த விஜய், சாந்தனுக்கு வாய்ப்பு கொடுத்து மாஸ்டர் படத்தில் முக்கியமான ஒரு ரோல் கொடுத்துள்ளார். மாஸ்டர் படத்தைப் பற்றி சாந்தனு அவர்களிடம் கேட்ட போது மாஸ்டர் படத்தின் முழுக்கதை என்னால் இப்போது சொல்ல முடியாது ஆனால் மாஸ்டர் படத்தில் என்னால் ஒரு திருப்பம் இருக்கும். திரையில் பாருங்கள் என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
தற்போது சாந்தனு ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார் அந்த படத்தின் பெயர் “முருங்கைக்காய் சிப்ஸ்”. இந்த படத்தில் அதுல்யா ரவி சாந்தனுவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் போன்ற சாயலில் இளசுகளுக்கான படமாக இருக்கும் என்றெல்லாம் தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது.