தலைமுடிக்கு டை அடிக்கிற வசதி வந்த பிறகு யாருக்கு தலைமுடி கருகருவென இருக்கிறது யாருக்கு தலைமுடி நரைத்திருக்கிறது என்பதை கண்டறிய முடியவில்லை. இது ஒரு வசதி தான் என்றாலும் தலைக்கு டை அடிப்பதால் ஏராளமான பக்க விளைவுகள் ஏற்படுகின்றன.

நாம் பயன்படுத்தும் தலைமுடி ரசாயனத்தில் சில்வர், மெர்குரி, லெட் போன்றவை உள்ளன. தொடர்ந்து ரசாயனம் கலந்த தரமற்ற ஹேர் டை பயன்படுத்தும்போது கூந்தல் வறட்சி போய் முடி உடைதல், உதிர்தல், பொடுகு, இளநரை ஏற்படும். வழுக்கை விழும் வாய்ப்புகள் அதிகம். எனவே இயற்கையான முறையில் நரை முடி வராமல் இருக்க இயற்கையான உணவை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்பதை கீழ்வருவற்றுள் காண்போம்.

வெள்ளை முடியை குறைக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின் பி 12 குறைபாட்டால் நீங்கள் நரைமுடி பெற்றிருந்தால் கடல் உணவுகள், இறைச்சி, முட்டை போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பால் மற்றும் சீஸ் போன்றவை நல்ல ஆகாரங்கள் ஆகும். சைவ உணவை எடுத்துக் கொள்பவர்கள் மருத்துவரை அணுகிய பிறகு வைட்டமின் பி1 உணவுகளை தேர்வு செய்யலாம். பெர்ரி வகைகள் திராட்சை, பச்சை இலை கொண்ட காய்கறிகள், கிரீன் டீ போன்ற ஆக்சிஜனேற்ற நிறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும்.

பெர்ரி பழங்கள் வைட்டமின் சி நிறைந்தவை. இறைச்சிகள் ரத்த சோகை மற்றும் இரும்பு சத்து குறைபாடுகளை எதிர்த்து போராடுகிறது. கேரட் வைட்டமின் ஏ நிறைந்திருக்கும். கருவேப்பிலை வைட்டமின்கள் பி மற்றும் செலினியம், அயோடின், துத்தநாகம் மற்றும் இரும்பு தாதுக்கள் நிறைந்தவை.

கீரைகள் மெலனின் உற்பத்திக்கு உதவுபவை. முட்டை வைட்டமின் பி 12 நிறைந்திருக்கும். பீன்ஸ் வகைகள் புரதத்தின் வளமான ஆதாரமாகும். சூரியகாந்தி விதைகள் ஆக்சிஜனிட்டிகள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. அக்ரூட் பருப்புகள் தாவரத்தின் வளரமான ஆதாரம் இதுவும் மெர்லின் உற்பத்திக்கு உதவுகிறது.










