நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ ஒரு வங்கிக் கணக்கை மூடிவிட்டு வேறொரு புதிய கணக்கிற்கு மாறும்போது பட்ட அவஸ்தைகள் நினைவிருக்கிறதா? பழைய கணக்கில் கொடுத்து வைத்திருந்த மாதத் தவணை (EMI), மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு (SIP) போன்ற பணப் பரிவர்த்தனைகளை (Mandates) புதிய கணக்கிற்கு மாற்றுவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும்.
ஒருவேளை இரண்டு வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டால் (Bank Mergers) கேட்கவே வேண்டாம், ஏகப்பட்ட குழப்பங்கள் வரும். , இனி பொதுமக்களுக்கு அந்த கவலை இருக்காது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது ‘பேமெண்ட்ஸ் விஷன் 2028’ (Payments Vision 2028) திட்டத்தின் ஒரு பகுதியாக, PaSS (Payments Switching Service) என்ற புதிய சேவையைக் கொண்டுவர ஆலோசித்து வருகிறது.
எளிமையாகச் சொன்னால், நாம் ஒரு மொபைல் நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு மொபைல் நம்பரை மாற்றும் ‘போர்ட்டபிலிட்டி’ (Portability) வசதியைப் பயன்படுத்துகிறோம் அல்லவா? அதேபோல உங்கள் வங்கிக் கணக்கையும் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளும் வசதிதான் இதுபழைய கணக்கில் இருக்கும் அத்தனை இஎம்ஐ, எஸ்ஐபி மற்றும் இதர பணப் பரிவர்த்தனை ஆணைகளையும் ஒரே நேரத்தில் புதிய கணக்கிற்கு மாற்றிவிடுவது.
ஒட்டுமொத்தத்தில், ஆர்பிஐ-யின் இந்த புதிய திட்டங்கள் சாதாரண மக்களின் வங்கிப் பயன்பாட்டை எளிமையாக்குவதுடன், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மிகவும் பாதுகாப்பானதாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.










