Sunday, September 6, 2026
-- Advertisement--

மீண்டும் கவனம் ஈர்த்த மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குநர்.. ‘பாலன்’ படத்தின் முழு விமர்சனம்!

“ஒரு சில வாய்ப்புகள் வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே வரும். அதைத் தவற விட நேர்ந்தால், தவறவிட்ட அந்த ஒரு வாய்ப்பை நினைத்தே மொத்த வாழ்வும் வீணாகிவிடும்”. ஒரு நல்வாய்ப்பை மிக பிரமாதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் எழுத்தாளர் இயக்குநர் சிதம்பரம். முதலில் ‘ஜானே-மன்’, அடுத்து அதிக பட்ச கேரள மாநில விருதுகள் வாங்கி கொண்டாடப்பட்ட “மஞ்சும்மல் பாய்ஸ்”-க்குப் பிறகு சிதம்பரம் இயக்கியிருக்கும் மூன்றாவது திரைப்படம் இது.

கதை : ஒரு அம்மாவும் (ஃபர்சானா பாலதிங்கல்) அவரது மகனும் (ஆதிசேஷன்) ஆகிய இருவரை சுற்றி நகர்கிறது கதை. படத்தின் தொடக்கத்தில் சிறையில் இருந்து வெளிவரும் இருவரும் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயர்கள் மற்றும் அடையாளங்களுடன் கிடைத்த வேலையை செய்து பிழைத்து வருகிறார்கள். கடைசியாக ஒரு வயதான  பெண்  ஒருவரை கவனிக்கொள்ள ஒரு வீட்டிற்கு இருவரும் செல்கிறார்கள். அவருடன் இருவருக்கும் நெருக்கம் ஏற்படவே அங்கு கொஞ்ச காலம் தங்குகிறார்கள். வெளிப்படையாக இல்லாவிட்டாலும் அம்மா பையன் ஏன் இருவரும் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் என தெரியவருகிறது. தனது இறப்பிற்கு பின் இருவரும் இதே வீட்டில் தங்கிக்கொள்ளலாம் என கிழவி சொல்ல அப்படியே செய்கிறார்கள். ஆனால் எதிர்பாராத பல திருப்பங்களால் அம்மாவும் பையனும் இருவரும் பிரிய வேண்டிய சூழல் உருவாகிறது. அம்மாவும் மகனும் கடைசியில் ஒன்றாக நிம்மதியான தங்களுக்கு பிடித்த தனிமையான வாழ்க்கையை வாழ்ந்தார்களா என்பதே பாலன் படத்தின் கதை. 

விமர்சனம்: படம் தொடங்கும் முன்னர், “புகைப்பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்” என்னும் வாசகத்தை திரைப்படத்தில் வரும் ஒரு மூதாட்டி பேசியிருக்கிறார். அதே மூதாட்டி , திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார். கதைக்கு பொருத்தமான நடிகர்கள் கிடைத்துவிட்டாலே படம் பாதி வெற்றி என்பார் இயக்குநர் கே.பாலச்சந்தர். அவ்வகையில் பெயரற்ற அன்னையாக வரும் ஃபர்சானா பலத்திங்கல் மற்றும் சிறுவயது மகனாக வரும் ஆதிசேஷன், மும்மது ஜினான், மற்றும் டாலி ஜூன் கதாபாத்திர வார்ப்புகளோடு மிகச் சரியாகப் பொருந்தியிருக்கின்றனர். ஆனால் மஞ்சும்மள் பாய்ஸின் இமாலய வெற்றி தன்னுடைய அனைத்து படைப்பில் எந்தவித தாக்கத்தையும் வெளிப்படுத்தாமல் அவ்வளவு பத்திரமாக பார்த்துக் கொண்டது இயக்குநர் சிதம்பரத்தின் துணிச்சலை காட்டுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles