இயக்குனர் பாலா தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குனர். இவர் எடுத்த படங்கள் அனைத்தும் பல வருடங்கள் கழித்தும் மக்களால் மறக்கமுடியாத படங்களுக்காக இருக்கும் அந்த அளவிற்கு கதைகளுக்கும், கதாபத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் பாலா ஒருவர்.
இவர் முதல் படமான “சேது” சினிமாவில் விழுந்து இருந்த சீயான் விக்ரமை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. விக்ரமின் நடிப்பை வெளியில் கொண்டு வந்தது பாலா தான். அதனை தொடர்ந்து பாலா இயக்கிய படங்கள் மக்கள் மனதை உலுக்கும் விதமாக இருந்தது. திரை துறையில் உள்ள பல நடிகர்களின் நடிப்பை வெளியில் கொண்டு வந்து பெயர் வாங்கி கொடுத்தது இயக்குனர் பாலா தான்.
இதையும் படிங்க : மொட்டை மாடியில் செம குத்து குத்திய மைனா நந்தினி..!!! கர்ப்பகாலத்தில் இப்படி பண்ணலாமா ரசிகர்கள் வருத்தம்.
காலங்கள் மாறினாலும் பாலா படத்தின் டேம்ப்லடே மாறாமல் இன்றும் சுவாரசியம் குறையாமல் படங்களை எடுத்து வருகிறார். தற்பொழுது இயக்குனர் பாலாவின் மனைவி சமூகவலைத்தளத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
அதில் இயக்குனர் பாலாவின் மனைவி மலர், நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி மற்றும் இயக்குனர் ஹரியின் மனைவி ப்ரீத்தாவும் அழகான புடைவையை அணிந்துகொண்டு ஒன்றாக ஹோம்லி போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சேலையில் கவர்ச்சி காட்டி பிரபலம் ஆன நடிகைகள்மத்தியில் இது போல சேலை அணிந்து ஹோம்லியான போஸ் கொடுத்த இவர்கள் எவ்வளவோ மேல்.