தமிழகத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி பக்ரீத் பண்டிகையை கொண்டாடப்படும் காஜி சலாஹீத்தீன் அய்யூபி நேற்று அறிவித்துள்ளார்.
நேற்று பிறை காணப்படும் என்று எதிர்பார்த்தனர் ஆனால் பிறை தென்படாததால் ஆகஸ்டு 1ஆம் தேதி பக்ரீத் கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.
இது பற்றி ஒரு அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார் அதில் துல் ஹஜ் மாதம் பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை அதனால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் ஜூலை 23 ஆம் தேதி அன்று துல்ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது, ஆகையால் பக்ரீத் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.