தீபாவளி திருநாள் அன்று வட இந்தியா குடும்பம் ஒன்று அயோத்தியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு தீர்த்த யாத்திரைக்கு ரயிலில் வருகிறது. மதுரையில் இறங்கி இராமேஸ்வரத்திற்கு வாடகை காரில் செல்லும்போது குடும்ப தலைவரின் அடாவடித்தனத்தால் கார் விபத்துக்குள் ஆகிறது. இதில் அவரது மனைவி அகால மரணம் அடைய அவரது மகளும் கிடந்து துடிக்கிறார்கள். ஊர் விட்டு ஊர் வந்து இறந்து போன அந்த பெண்ணின் உடலை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் ஒரு மனிதநேயமிக்க மனிதனின் கதை தான் அயோத்தி நாயகனாக சசிகுமார்.

கதை வசனம் எழுதி இயக்கி இருப்பவர் மந்திரமூர்த்தி. அருமையான கதை அற்புதமான வசனம் ஆழ்ந்த இயக்கம் அத்துடன் அனைவரின் இயல்பான நடிப்பு. இதனால் படம் பிரமாதமாக இருக்கிறது. படத்தில் நாலைந்து இடங்களில் அழ வைத்து விடுகிறார். டைரக்டர் முதலில் அந்த பெண் அழகான அவள் முரடானுக்கு வாழ்க்கைபட்டும் கணவர் மீது பாசம் வைத்திருக்கும் பாசமும், குழந்தைகள் மீது வைத்திருக்கும் நேசமும் நல்லதொரு தாயான அவளது மரணம் தாங்க முடியவில்லை. இருந்த பணம் எல்லாம் போஸ்ட்மார்ட்டம் செய்ய கொடுத்தாச்சு.

கஷ்டப்பட்டு எல்லாம் முடிந்து பாடியை விமானத்தில் ஏற்றி ஆச்சு. ஆனால் உடன் போக டிக்கெட் இல்லை, உடனே நாயகனும் விமான அதிகாரியும் அந்த விமானத்தில் போக இருப்பவர்களிடம் நிலைமையை எடுத்துக் கூறி யாராவது இரண்டு பேர் விட்டுக் கொடுத்தால் அவர்கள் செல்ல முடியும் என கண்ணீரோடு கேட்க யாரும் முன் வராத நிலையில் வயதான தம்பதியினர் மட்டும் எழுந்து விட்டு கொடுக்கும்போது அங்கே ஆனந்த கண்ணீர் முட்டுகிறது.

இவை எல்லாவற்றிற்கும் சிரமமாக நம்மை நம்பி வந்தவர்களுக்கு நாம் தான் உதவனும் என்றபடி எல்லா சிரமங்களையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டு, வழி அனுப்பி வைத்த இளைஞனை கண்ணீருடன் கட்டித்தழுவி தம்பி உங்க பேர் என்ன..? என அந்த முரட்டு வட இந்திய கேட்கும் போது தன் அத்தனை பேருக்கும் தெரிகிறது. அதுவரை கதாநாயகனின் பெயர் கூட தெரியாமல் படம் பார்த்து இருக்கிறோம் என்று கேள்விக்கு பதிலாக அப்துல் மாலிக் என இளைஞன் சசிகுமார் பதில் சொல்லும் போது தியேட்டரில் அப்படி ஒரு சிலிர்ப்பு சசிகுமார் அந்த கேரக்டராவே வாழ்ந்திருக்கிறார்.

வட இந்திய குடும்ப தலைவராக நடித்திருக்கும் யஷ் பால் சர்மாவை பார்த்தாலே பற்றி கொண்டு வரும் அந்த அளவுக்கு உயிரோட்டமான நடிப்பு. அவரது மகளான பிரியா அஸ்ராணி தாயே இழந்து தவிக்கும் தவிப்பிலும் ஊருக்கு போய் விடுவோமா என்ற ஏக்கத்திலும் உருக வைத்து விடுகிறார். தமிழுக்கு ஒரு நல்ல நடிகை கிடைத்து இருக்கிறார். ஏ.ஆர்.ரகுநந்தனின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு பக்க பலமாய் உள்ளது. அயோத்தி தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லக்கூடாது கதை மனிதநேயத்தை சொல்லும் மகத்தான படம்.