Friday, April 19, 2024
-- Advertisement--

நாளை வெளியாகும் அயலான் படத்தின் மாஸ் அப்டேட்…!!! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

கடந்த மூன்று ஆண்டுகளாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலாம் திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளரான கே.ஜே.ஆர்.ராஜேஷ் முக்கிய அறிவிப்பை நாளை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அயலான் திரைப்படம் குறித்து கே.ஜே.ஆர்.ராஜேஷ் கூறியிருப்பதாவது:
சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, ஆர். ரவிகுமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், எங்களின் பிரம்மாண்ட படைப்பு ‘அயலான்’ பற்றிய புதிய அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம்.மேலும் பல தடைகளை தாண்டி நாளை ஏப்ரல் 24, 2023 காலை 11:04 மணிக்கு’அயலான்’ அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

‘அயலான்’ திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம். அயலான், ஒரு பான் இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGL காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.

திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது. திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தபட்டுள்ளது.

மேலும் 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாலின் முதல் முழு நீள லைவ் ஆக்சன் திரைப்படமாக அயலான்” இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நேரத்தில், பல ஹாலிவுட் திரைப்படங்களின் CG-க்குப் பின்னால் உள்ள Phantom FX நிறுவனத்திற்கு, அவர்களது அளப்பரிய CG பணிக்காக நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம்.

உங்களது பொறுமை மற்றும் இடையிடாத ஆதரவிற்காக அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம். நாளை அயலான் அப்டேட் நிச்சயமாக உங்களை மகிழ்விக்கும்.

“அயலான்’ மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அதிசங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்ல தயாராகுங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles