இந்திய சினிமாவில் அடுத்தடுத்து மரங்கள் நிகழ்த்து வருகின்றன. இர்பான் கான், ரிஷி கபூரை தொடர்ந்து தற்போது மாபெரும் கலைஞரை தமிழ் சினிமா இழந்து விட்டது.
தமிழ் சினிமாவில் ஏவி சம்பத், ஆர் ஆர் தியேட்டர் சம்பத் என தமிழ் சினிமாவில் பலராலும் அழைக்கப்படும் பிரபல ஒளிப்பதிவாளர் கே சம்பத் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.
இவரின் வயது 87 . இவரது பூர்விகம் கொண்ட இவர் சென்னையில் ஒளிப்பதிவில் டிப்ளமோ முடித்து ஏ வி எம் நிறுவனத்தில் பணியை தொடர்ந்தார்.
இவர் மூன்று முறை தமிழ்நாட்டு அரசின் விருதும், ஒரு முறை தேசிய விருதும் வாங்கியுள்ளார். 6000 பாடல்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜாவுடன் 100 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இவரது மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
