அதர்வா முரளி, “பாணா காத்தாடி” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகினர். அந்த படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பின் தமிழ் சினிமாவில் நல்ல கதைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நடித்து கொண்டு இருக்கிறார் அதர்வா.
அவரது தாத்தா ஒரு இயக்குனர், அவர் தந்தை முரளி ஒரு புகழ் பெற்ற நடிகராக இருந்தாலும் தனது கடின உழைப்பால் கதைகளுக்கு தேவைப்பட்டால் தனது உடலையும் வருத்தி நடிக்கும் அளவிற்கு நடிப்பை நேசித்து நடிக்கும் நடிகர்களில் ஐவரும் ஒருவர். என்ன தான் அவரது தந்தை முரளி ஒரு இயக்குனரின் மகன் என்றாலும், முதலில் சினிமாவில் ஒதுக்கியவர்களும் உள்ளனர். இவரை எப்படி மக்கள் ஹீரோவாக ஏத்துக்கொள்வார்கள் என்றெல்லாம் கூறியுள்ளனர். நடிகைகளுக்கு செய்து கொடுக்கும் வசதிகள் கூட முரளிக்கு கிடையாதாம். ஒரு சாதாரண மனிதனாக கஷ்டப்பட்டு தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்தார் முரளி. தனது மகனை ஹீரோவாக ஆக்கி சந்தோஷப்பட அந்த வருடத்திலேயே ஹார்ட் அட்டாக் வந்து தூக்கத்திலே இறந்து விட்டார்.

இன்று முரளியின் பிறந்தநாள். “WE MISS YOU WE LOVE YOU DAD ” என்று தனது தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து அவரது நியாபக புகைப்படங்கள் வெளியிட்டு இருந்தார் அதர்வா . இதோ அந்த புகைப்படங்கள்.

