தமிழ் சினிமாவில் M குமரன் S /O மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை அசின். யாரடா இந்த கேரளத்து புதுவரவு இவ்வளவு அழகா கலையா இருக்காங்களே என்று ரசிகர்களை உற்றுநோக்க வைத்தார் முதல் படத்திலேயே அசினுக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பை கொடுத்தார்கள்.

அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தது. சூர்யாவுடன் கஜினி திரைப்படத்தில் கல்பனா என்ற கதாபாத்திரத்தில் இயல்பான நடிப்பால் அசத்தியிருந்தார் அதைதொடர்ந்து தளபதி விஜய்யின் போக்கிரி திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் ஏகப்பட்ட தமிழ் பட வாய்ப்புகள் அசினுக்கு கிடைத்தது.

எல்லா முன்னணி நடிகைக்கும் வரும் ஆசை தான் அசினுக்கும் வந்தது தமிழில் முன்னணி நடிகையாக வந்துவிட்டோம் பாலிவுட்டில் நடித்து தனது மார்க்கெட்டை இன்னும் உயர்த்திக் கொள்வோம் சம்பளத்தை ஏற்றுவோம் என்று பாலிவுட்டில் நடிக்க சென்றார் அசின்.

ஹிந்தியில் சில படங்களில் நடித்து வந்த அசின் கஜினி படத்தில் வருவதை போல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் அவர் வேறு யாருமில்லை MICROMAX நிறுவனத்தின் உரிமையாளர் ராகுல் சர்மா அவர்கள் தான் ஜனவரி 2016ஆம் ஆண்டு கிறிஸ்டியன் மற்றும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார் அசின்.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்ட அசின் தனது குடும்பத்தை கவனித்து வந்தார் அசினுக்கு ஆரின் என்ற மகள் உள்ளார் தற்பொழுது தனது மகளை கண்ணும் கருத்துமாக பார்த்து வரும் அசின் நேற்று மகளின் ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் அச்சு அசல் அசின் போலவே இருக்கும் இந்த JUNIOR அசினுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


