Monday, August 17, 2026
-- Advertisement--

ஆசியகுத்துச்சண்டைசாம்பியன்ஷிப்:இந்தியாபெண்கள்வரலாற்றுசாதனை

மங்​கோலி​யா​வின் உலான்​பாதர் நகரில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடை​பெற்று வருகிறது. இதில் மகளிருக்​கான 48 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் மீனாட்சி ஹூடா 5-0 என்ற கணக்​கில் மங்​கோலியாவின் நோமுந்​தரி என்க்​-அம்கலனை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றார்.

           54 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் பிரீத்தி பவார் 5-0 என்ற கணக்​கில் டோக்​கியோ ஒலிம்பிக்கில் வெண்​கலப் பதக்​கம் வென்​றிருந்த சீன தைபே​வின் ஹுவாங் ஹியாவோ வெனை தோற்​கடித்து தங்​கம் வென்​றார். 60 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்டியில் இந்​தி​யா​வின் பிரியா கங்​காஸ் 3-0 என்ற கணக்​கில் வட கொரி​யா​வின் வான் உன் ஜியோங்கை வீழ்த்தி தங்​கம் வென்றார்.

    அதே வேளை​யில் 70 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்டியில் இந்​தி​யா​வின் அருந்​ததி சவுத்ரி 4-1 என்ற கணக்​கில் கஜகஸ்​தானின் பாகித் சீடிஷை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றார்.அதேவேளை​யில் 57 கிலோ எடைப் பிரிவு இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் ஜெய்​ஸ்​மின் லம்​போரியா 0-5 என்ற கணக்​கில் தாய்​லாந்​தின் புன்​ராவீ ரூன்​ரோஸிடம் தோல்வி அடைந்து வெள்​ளிப் பதக்​கம் வென்றார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles