Wednesday, July 17, 2024
-- Advertisement--

சினிமாவில் அறிமுகம் ஆகும் பிரபல நடிகர் விஜயகுமார் அவர்களின் பேரன்..!!! அறிமுக படுத்திய உச்ச நடிகர்..!!! புகைப்படம் உள்ளே .

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை புகழ்பெற்ற நடிகர்கள் தங்களது மகனை சினிமாவில் ஹீரோவாக்கி அழகு பார்க்க வேண்டும் என்று நினைப்பார்கள் அந்தவகையில் நடிகர் விஜயகுமார் அவர்கள் தனது மகன் அருண் விஜய்யை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

சுந்தர் சி இயக்கத்தில் முறை மாப்பிள்ளை என்ற படத்தில் அறிமுகமானார் அருண் விஜய். அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்த இவர் பெரிய அளவிற்கு மக்கள் கொண்டாடும் ஹீரோவாக வரவில்லை என்பது விஜயகுமார் அவர்களுக்கு வருத்தமே.

இவர் நடித்த படங்கள் நன்றாக இருந்தும் பெரிய அளவில் ஓடாததால் அருண் விஜயால் சினிமாவில் ஒரு பெரிய இடத்தை அடைய முடியவில்லை. இவருக்குப் பின் வந்த நடிகர்கள் எல்லாம் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருந்தார்கள்.

பல வருடங்கள் கழித்து அருண் விஜய்க்கு தடையற தாக்க இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வரவேற்பை கொடுத்தது அதனைத் தொடர்ந்து தல அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் அஜித்திற்கு நண்பராகவும் வில்லனாகவும் நடித்துள்ளார்.

குற்றம் 23 என்ற வித்தியாசமான கதையில் அருண்விஜய் நடித்திருந்தார் அந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது. அருண் விஜயின் சினிமா பயணத்தின் GRAPH தற்பொழுதுதான் ஏறிக்கொண்டே போகிறது.

நல்ல திறமை இருந்தும் சினிமாவில் போராடி வந்த அருண்விஜய் சமீப காலத்தில் நடித்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதால் இவருக்கு நிறைய படவாய்ப்புகள் குவிந்தது. தற்பொழுது அவர் நடித்து வரும் பாக்ஸர் என்ற படத்திற்காக தனது உடலை வருத்திக் கொண்டு மெனக்கட்டு நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சினிமாவில் போராடி ஜெயித்து உள்ளார் அருண்விஜய் தற்பொழுது அவரது மகன் அர்னவ்வை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். தனது மகனின் முதல் படத்தை சூர்யா தயாரிக்கிறார் என்பது சந்தோஷமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அருண் விஜய்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles