Saturday, October 10, 2026
-- Advertisement--

“கலைஞர்களின் வாழ்க்கையை ஏஐ பாதிக்கிறது” – கங்கை  அமரன் வேதனை!!

இயக்​குநர், பாடலாசிரியரு​மான கங்கை அமரன் எழு​தி​யுள்ள ‘உயிரிணை​யே’ என்ற இசை ஆல்​பம் வெளி​யீட்டு விழா சென்னையில் நடைபெற்​றது. கங்கை அமரன் பேசும்​போது, “முன்பெல்​லாம் ஒரு பாடலை தொடரலையாக பாடு​வோம்.

இப்​போது ஒவ்​வொரு வரி​யாகப் பாடுகிறோம். செயற்கை தொழில்​ நுட்​பத்​தில் (ஏ.ஐ) ஃபீட் பண்ணிப் பாடு​கிறோம். அதற்கு நாம் எப்​படி நம்​மைப் பெரு​மைப்​படுத்​திக் கொள்வது ? உண்​மை​யைச் சொல்ல வேண்​டுமென்​றால் ஏ.ஐ. தொழில்​ நுட்​பம் நம்​மைக் கெடுத்​துக் கொண்​டிருக்​கிறது என்பதை உறு​தி​யாகச் சொல்​கிறேன்.

அதை நம்பி வேலை செய்தால் பிற்​காலத்​தில் மூளை வேலை செய்​யாது. ஒரு தீமை ஏ.ஐ-​யிடம் கொடுத்து விட்​டால், அதுவே பாட்​டெழுதி விடு​கிறது. இதில் எப்​படி நம் பெயரைப் போட்​டுக் கொள்​வது.

 எதற்​குச் சொல்​கிறேன் என்​றால் வருங்​கால குழந்​தைகள் தன்னால் சிந்​திக்​கக் கற்​றுக் கொள்ள வேண்​டும், எழுதத் தெரிந்திருக்க வேண்​டும். வருங்​கால குழந்​தைகள் தன்​னிடம் இருக்​கின்ற சுய ரூபங்​களை வெளி​யில் கொண்டு வர வேண்​டும் என்​பது என் மனமார்ந்த ஆசை” என்​றார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles