இந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான். இவரின் இசைக்கு கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளமே நாடு முழுவதும் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் புனேவில் ஏ.ஆர்.ரகுமான் தலைமையில் இசை நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் லைட்மேனங்களுக்கு நிதி திரட்டும் வகையில் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்து கண்டு களித்தனர். அப்போது மேடையில் பாடிக் கொண்டிருந்த ஏ.ஆர்.ரகுமானை பாட விடாமல் புனே காவல் அதிகாரி தடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதைக் கண்டு அங்கிருந்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இசை நிகழ்ச்சி அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேலாக நடத்தப்பட்டதால் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அதனால் பாடலை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவர் வெளியேறும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
Video | Famous musician AR Rahman's performance in Pune's Maharashtra yesterday was stopped by the police. The event continued beyond the time limit, so the police stopped the event. pic.twitter.com/x6aLw25yfC
— MUMBAI NEWS (@Mumbaikhabar9) May 1, 2023