இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் தான் அனு இம்மானுவேல் . இவர் நடித்த இந்த படத்தில் காந்த கண்ணழகி என்ற பாடல் ஹிட்டானதால் இவரை காந்த கண்ணழகி என்று ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினார்கள். இந்த பாடலை எப்போது கேட்டாலும் அனுவின் ஞாபகம் தான் வரும்.
ஓய்வு நேரத்தில் அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வந்த அனு. தற்போது வெளியிட்ட ஒரு சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் நம்ம காந்த கண்ணழகியா இப்படி போஸ் கொடுக்குறது என்று ஆச்சரியத்தில் உள்ளனர்.
தமிழில் அடக்க ஒடுக்கமாக நடித்த நம்ம காந்த கண்ணழகி தெலுங்கு திரையுலகில் கொஞ்சம் தாராளம் காட்டி வருகிறாராம். தாராளம் காட்டுவதால் மட்டுமே இவருக்கு தெலுங்கு சினிமாவில் நிறைய படவாய்ப்புகள் வருகிறது என்று தகவல்கள் வெளிவருகின்றது.