LEGEND சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் அவர்கள் சரவணா ஸ்டோர்ஸ் ப்ரொடக்சன் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதில் முதல் படத்தை தானே நடித்து லெஜண்ட் என்று அந்த திரைப்படத்திற்கு பெயர் இடப்பட்டு உலகம் முழுவதும் சில நாட்களுக்கு முன்புதான் வெளியிட்டார்.
லெஜண்ட் படத்தைப் பார்த்து ரசிகர்கள் நண்பர்களுடன் போய் சிரித்து விட்டு வரலாம் அண்ணாச்சி அவர்கள் எமோஷன் பார்த்து ஆடிப் போயிட்டோம் என்றெல்லாம் விமர்சனம் செய்து வந்தார்கள் ஆனால் லெஜெண்ட் படத்திற்கு தமிழகம் முழுவதும் ஒரு பெரிய ஓபனிங் இருந்தது உண்மை. இன்றும் பல திரையரங்குகளில் தி லெஜன்ட் திரைப்படம் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ரஜினியின் ஃபார்முலாவை முதல் படத்திலேயே கடைப்பிடித்துள்ளார் அண்ணாச்சி. அண்ணாச்சி அவர்கள் படத்தின் தாறுமாறான வசூலை கண்டு சந்தோஷத்தில் உள்ளார். முன்னணி நடிகர்கள் திரைப்படங்கள் சரி இல்லாமல் போனால் தியேட்டர்கள் வெறிச்சோடி இருக்கும் ஆனால் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும் சரவணன் அருளை காண்பதற்காக மக்கள் தியேட்டருக்கு செல்வது பெரிய ஆச்சரியத்தை சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தி உள்ளது.
இது ஒரு புறம் இருக்க அண்ணாச்சியின் தி லெஜெண்ட் திரைப்படத்தின் கதாநாயகி நடிகை ஊர்வசி ராவ்டேலா பாலிவுட்டில் பிசியாக படங்களில் நடித்து வருகிறார் சமீபத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் முரட்டு கட்டைகளை தூக்கிக்கொண்டு அவரை பல நபர்கள் தாக்க வரும்படி இருந்தது என்னைக் காப்பாற்றுங்கள் என்று கேப்சென் ஒன்றை போட்டிருந்தார்.
அது லெஜன்ட் படத்தில் சூட்டிங் காட்சி என்றும் உலகம் முழுவதும் உள்ள என்னுடைய ரசிகர்களுக்கு நன்றி என்னுடைய முதல் PAN இந்தியா திரைப்படமான லெஜெண்ட் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி உள்ளது உங்கள் அன்புக்கு நன்றி என்று பதிவிட்டு இருந்தார் நடிகை.
ஒரு வேலை லெஜெண்ட் படத்தை பார்த்த பின் நடிகையை ரசிகர்கள் துரத்துகிறார்களோ என்று கிண்டல் செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.