Tuesday, December 3, 2024
-- Advertisement--

தளபதி விஜயின் LEO படத்தில் அண்ணாச்சி…!!!! இணையத்தில் பரவி வரும் வீடியோவால் குழப்பம்..!!!

தளபதி விஜய்க்கு வாரிசு திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

குடும்பம் சார்ந்த கதை என்பதால் குடும்பமாக தியேட்டருக்கு படையெடுத்து விஜயின் வாரிசு திரைப்படத்தை பார்த்து வெற்றி படமாக ஆக்கினார்கள் ரசிகர்கள். வாரிசு 300 வசூலை கடந்து விஜய்க்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

வாரிசு படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் இணையும் படத்திற்கு லியோ என்று பெயர் சூட்டி உள்ளார்கள் படக்குழுவினர். இந்த படம் இதுவரை வந்த விஜய் படத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் வழக்கம் போல விஜய் படமாக இல்லாமல் லோகேஷ் பாணியில் ஒரு தரமான ஆக்சன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

லியோ படத்தில் விஜய் உடன் அர்ஜுன் மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

லியோ படத்தின் சூட்டிங் சிறப்பாக காஷ்மீரில் நடந்து கொண்டிருக்கிறது மைனஸ் டிகிரி கூலூரில் இரவும் பகலமாக கடினமாக உழைத்து வருகிறார்கள் படக்குழு.

இந்நிலையில் LEGEND சரவணன் அவர்கள் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் காஷ்மீரில் LEGEND சரவணன் அருள் இருப்பதாகவும் சமூகவலைத்தளத்தில் செய்திகள் வெளிவந்து கொண்டு உள்ளது.

அதனை பற்றி விசாரிக்கையில் அண்ணாச்சி தனது ஓய்வு நேரத்தை செலவிட காஷ்மீர் சென்று உள்ளார். அங்கு காஷ்மீரின் அழகை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு உள்ளார் அவ்வளவு தான் அண்ணாச்சி விஜயின் லியோ படத்தில் நடிக்கவில்லை என்றும் நம்பக தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வந்து உள்ளது.

தப்பிச்சோம் டா சாமி என்று இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles