Wednesday, July 17, 2024
-- Advertisement--

அண்ணாவின் வாரிசு யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி..! ஆட்சிப்பணி அலங்கரிக்க வரும் அடுத்த வாரிசு..!

இந்திய ஆட்சிப் பணிகளுக்கான தேர்வு ஆனது யுபிஎஸ்சி தேர்வு. இதில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் கொள்ளுப்பேத்தி வெற்றி பெற்றுள்ளார். 2019 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள் கடந்த வாரம் வெளியாகி இந்தியா முழுக்க பல்வேறு பகுதியிலிருந்து மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். இதில் ஏழ்மையான பின்னணியில் உள்ள மாணவர்களும் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது தான் சிறப்பு.

இந்தத் தேர்வில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் கொள்ளுப்பேத்தி வெற்றி பெற்றுள்ளார். 23 வயதான பிரித்திகா ராணி இந்தத் தேர்வில் வெற்றி பெற்றது தமிழகத்திற்கு நம்பிக்கை ஊட்டும் செய்தியாக இருக்கிறது .

இவர் 171 வது இடத்தை பிடித்துள்ளார். IAS ஆகும் கனவுடன் கடுமையாக முயற்சியில் தேர்வை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இடம் காரணமாக பெரும்பாலானோர் இவர் ஐ எஃப் எஸ் பணி கிடைக்க வாய்ப்புள்ளது எனக் கூறுகின்றனர்.

யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற அண்ணாவின் கொள்ளுப் பேத்தியைப் முதலாவதாக தி மு க ஸ்டாலின் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles