Friday, April 19, 2024
-- Advertisement--

சமந்தாவை தூக்கி சாப்பிட்ட அஞ்சலி…!!! நெளிவு சுளிவான நடனத்தால் திக்குமுக்காடிய ரசிகர்கள்..!!!

சமந்தா சமீபத்தில் இவர் நடித்து வெளியான காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் மாபெரும் வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது குறிப்பாக கதீஜா கதாபாத்திரம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது.

எதார்த்தமான நடிப்பு கொஞ்சம் கிளாமர் என்று களம் இறங்கி நன்றாக ஸ்கோர் செய்திருந்தார் சமந்தா.

சமந்தா தனது விவாகரத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் புஷ்பா என்ற திரைப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார். ஓ அண்டவா மாமா என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடல் பட்டிதொட்டியெங்கும் பெரிய ஹிட் பாடலாக அமைந்தது.

புஷ்பா படத்திற்கு பெரிய புரமோஷன் ஏற்படுத்தியது அந்த பாடல் தான் காரணம் அந்தப் பாடலில் சமந்தாவின் கவர்ச்சி நடனமும், நெளிவு சுளிவு நடன அசைவுகளும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. அந்தப் பாடலுக்குப் பிறகு மீண்டும் ஐட்டம் பாடல் சினிமாவில் விரும்பி வைக்க ஆரம்பித்தார்கள்.

சமீபத்தில் சமந்தா போல அஞ்சலியும் தெலுங்கு படமொன்றில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடியுள்ளார். ரா ரா ரெட்டி என்று தொடங்கும் அந்த பாடல் யூ டியூபில் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டு உள்ளது.

அந்தப்பாடலில் அஞ்சலி ஆடும் அந்த நெளிவு சுளிவு ஆட்டத்தை பார்க்கையில் அப்படியே சமந்தா தான் கண் முன் வந்து செல்கிறார். சமந்தாவின் ஓ சொல்றியா மாமா தெலுங்கு பாடல் 269 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளது.

ஒரே பாடல் மூலம் கலக்கிய சமந்தாவை தொடர்ந்து தற்பொழுது அஞ்சலி பாடல் பிரபலமாகி வருகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles