அனிதா சம்பத் குறுகிய காலத்தில் பெரிய பிரபலம் ஆன ஒரு செய்தி வாசிப்பாளர். இவருக்குகென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. செய்திவாசிப்பாளராக இருந்து பிரபலம் ஆன லிஸ்டில் பிரியா பவானி ஷங்கர் , நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா அடுத்து அனிதா தான். சமுகலாவலைத்தளத்தில் அனிதாவை பற்றி ஏதாவது செய்திகள் வந்து கொண்டே இருக்கும். சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்து எந்திரன், சர்கார் மற்றும் காப்பான் போன்ற படங்களிலும் நடித்து வந்த அனிதா. தனது காதலரான பிரபா என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
புதிதாக YOUTUBE சேனல் ஒன்று தொடங்கி அதில் வித்தியாசமான வீடியோக்கள் எடுத்து வெளியிட்டு வந்தனர். அனிதா தற்பொழுது ஒரு சில வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த எமெர்ஜெண்சி வெப் சீரிஸ் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. நேற்று பிறந்தநாள் கொண்டாடிய அனிதா அதனை வீடியோவாக வெளியிட்டு உள்ளார்.
பிறந்தநாள் பற்றி அனிதா கூறியது “கொஞ்ச நாளா அம்மா வீட்ல தான் இருக்கேன்..பிறந்தநாள் அன்னக்கி பக்கத்துலயே இருக்குற என் பெரியம்மா வீட்ல இருந்தேன்…பிரபா இவ்ளோ தூரம் வருவாங்கனு எதிர்பாக்கல…மிக்க நன்றி… பிறந்தநாள்னா நண்பர்களோட வெளியா போகுற பழக்கம் பொதுவா எனக்கு இல்ல..எப்பவுமே..லீவ் போட்டுட்டு வீட்டுக்குள்ளயே தான் இருப்பேன்..காதலுக்கு பிறகு பிரபா கூட மட்டும் வெளிய போவேன்..அதுல தான் எனக்கு என்னமோ ஒரு திருப்தி.. போன வர்ஷம் 12மணிக்கு காதலனா என் வீட்டுக்கு வந்து கேக் வெட்டுனாங்க..இந்த வர்ஷம் கணவனா வந்துருக்காங்க.” என்று தனது கணவரை புகழ்ந்து தள்ளி உள்ளார்.