தமிழ் சினிமாவில் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத் ரவிச்சந்திரன். கடந்த 2012 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அனிருத் அறிமுகமானார்.

தனது இசையால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். தற்போது அனிருத் கைவசம் லியோ, ஜெயிலர், இந்தியன் 2, ஜவான், தலைவர் 170 என வரிசையாக பல முன்னணி நடிகர்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இதற்கு இடையே சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாட்ஷா ரஜினிகாந்த் ஸ்டைலில் ஆட்டோகாரன் கேட்டபில் ஆட்டோவில் அமர்ந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதோடு ரஜினியின் பாட்ஷா திரைப்படத்தின் ஆட்டோக்காரன் பாடலுடன் பகிர்ந்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து லைக்குகளை குவித்து ட்ரெண்டாகி வருகின்றனர்.










