Tuesday, November 5, 2024
-- Advertisement--

அனிருத்தை தான் திருமணம் செய்வேன் என விருது வழங்கும் விழாவில் போட்டுடைத்த பிரபல பிண்ணனி பாடகி…!!! யாருனு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். தனது துள்ளலான இசையால் ரசிகர்களின் மனதில் பெருமளவில் கவர்ந்துள்ளார் அனிருத். தற்போது இசையமைத்த டான்,டாக்டர், காத்துவாக்குல 2 காதல் போன்ற படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

அதைத்தொடர்ந்து கமலஹாசன் நடித்து தயாரித்துள்ள திரைப்படமான விக்ரம் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அனிருத் மிகவும் பிஸியாக பல படங்களில் கமிட்டாகி இசையமைத்து வருகிறார்.

அதோடு அனிருத்தின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. மேலும் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் எனவும் தகவல்கள் வெளியாகின. இவற்றை பொய் என்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் பாடகி ஜோனிடா காந்தி சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பாடகி ஜோனிடாவிடம் ரன்வீர் சிங், சூர்யா, அனிருத் இவர்களில் யாரை திருமணம் செய்து கொள்கிறீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அனிருத் தான் திருமணம் ஆகாமல் உள்ளார். அதனால் அவரை தான் திருமணம் செய்து கொள்வேன் எனக் கூறியுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அனிருத் மற்றும் ஜோனிடா இருவரும் இணைந்து பாடி பல ஹிட் பாடல்களை கொடுத்து உள்ளனர். மேலும் இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக காதலிப்பதாகவும் கூட தகவல்கள் பரவியது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles