திரையுலகில் நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் இருப்பவர் ஆண்ட்ரியா. பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள. அவர் தற்போது தமிழில் பிசாசு 2 , மாளிகை, நோ என்ட்ரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2013இல் தெலுங்கில் ரிலீஸ் ஆன தடக்தா என்ற படத்தில் நடித்தார். அவருடன் நாக சைதன்யா, தமன்னா, சுனில் நடித்தனர். ஆண்ட்ரியா தெலுங்கில் நடித்த ஒரே படம் இது இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் தெலுங்கு சினிமாவில் நடிக்கிறார்.
வெங்கடேஷ் நடிப்பில் உருவாகும் 75 ஆவது படமான சைந்தவ் என்ற படத்தில் ஆண்ட்ரியாவை தவிர ஸ்ரத்தா ஸ்ரீநாத், குஹானி ஷர்மா ஆகிய ஹீரோயின்களும் நடிக்கின்றனர் பாலிவுட் முன்னணி நடிகர் நவாசுதீன் சித்திக் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தை சைலேஷ் கோலமனு இயக்குகிறார்.