Monday, December 11, 2023
-- Advertisement--

பிரபல நடிகை ஆண்ட்ரியாவின் தங்கை திருமணம்…!!! அட மாப்பிள்ளை ஹாலிவுட் பட நடிகர் போல இருக்காரே…!!!

பிரபல பாடகி ஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் முதல் படத்திலேயே யாரடா இந்த பொண்ணு இவ்வளவு அழகா இருக்காங்க என்று ரசிகர்களை ஏங்க வைத்த ஆண்ட்ரியா தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

இவருடைய பாடல்களை கேட்டு மயங்காத இளைஞர்களே இல்லை அந்த அளவிற்கு அருமையாக பாடக்கூடியவர். சமீபத்தில் ஆண்ட்ரியா பாடிய ஓ சொல்றியா மாமா பாடல் பெரிய ஹிட் பாடலாக இன்றும் உள்ளது.

ஆண்ட்ரியா சில ஆண்டுகளுக்கு முன் திடீரென்று காதலில் விழ கடைசியில் அந்த காதலன் பாதியிலேயே விட்டு சென்றார். ஆண்ட்ரியாவை காதலித்தவர் பெரிய அரசியல்வாதியின் வாரிசு என்றும் அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் பல திடுக்கிடும் தகவல்களை சில வருடங்களுக்கு முன்பு தெரிவித்தார் ஆண்ட்ரியா. ஒரு புத்தகம் எழுதப் போவதாகவும் அந்த புத்தகத்தில் தன் வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயங்களும் பகிர்ந்து கொள்ள போவதாகவும் முடிவெடுத்த ஆண்ட்ரியா புத்தகத்தை எழுதி வெளியிடும் நேரத்தில் அந்தப் புத்தகத்தை வெளியிட கூடாது என்று அந்த அரசியல் புள்ளியிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது என்கிறார்கள் சினி வட்டாரத்தில்.

ஏற்கனவே அனிருத்தின் காதல் கசந்து போக ஆண்ட்ரியா சமீபத்தில் மீண்டும் காதல் தோல்வி அடைந்த பின் தன்னுடைய திருமணத்தைப் பற்றி நினைத்து கூட பார்ப்பதில்லையாம். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடிப்பது வெளிநாடுகள் சுற்றிப் பார்ப்பது விஷயங்கள் கலந்து கொள்வது என்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் ஆண்ட்ரியா.

இன்று ஆண்ட்ரியாவின் தங்கை நாடியா ஜெர்மியா திருமணம் நடந்து முடிந்துள்ளது தனது பெற்றோருடன் திருமணத்தில் கலந்து கொண்ட ஆண்ட்ரியா திருமண புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles