உலகெங்கும் கொரானோ வைரஸ் தாக்கம் ஆட்டிப்படைக்கிறது. நாளுக்கு நாள் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே போகிறது. அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் இந்நோய் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது.
இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4000 நெருங்கியுள்ளது. மேலும் 195 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்நோய்க்கான மருந்து கண்டுபிடிக்காத நிலையில் மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது தான் ஒரே வழி.
தற்போது இந்நோயியல் திரை பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வரும் நிலையில் லண்டன் வாழ் புலம் பெயர் தமிழரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆன தில்லை நாதன் கொரானாவால் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவரது மரணம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.