விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றியவர் ரம்யா. இவர் விஜய் தொலைக்காட்சியில் பாய்ஸ் வ்ஸ் கேர்ள்ஸ்,
பல சினிமா படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் இவர் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவர் ஆஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவள் திருமண வாழ்க்கை சிறிது காலமே நீடித்தது. இருவரும் மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்றனர். அதன்பிறகு சின்னத்திரையில் இருந்து விலகிய ரம்யா சற்று மாறுதலாக உடற்பயிற்சி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார்.
சில படங்களிலும் இவர் சில கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை அமலா பால் நடித்த ஆடை படத்தில் நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் ரம்யா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இலையில் வீட்டில் இருக்கும் நேரத்தை உருப்படியாக செலவழித்த ரம்யா தனது உடலை கணிசமாக குறைத்துள்ளார்.
அது குறித்த புகைப்படங்களை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.