தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் புதிய ட்ரெண்ட் உருவாக்கிய தொகுப்பாளினி பெப்சி உமா. இவர் பிடித்த நேயர்கள் விருப்பம் என்ற நிகழ்ச்சி மூலம் சன் டிவியில் – 15 வருடங்களுக்குமேல் பணியாற்றினார்.
ஒரே தொலைக்காட்சியில் 15 வருடங்களுக்கு மேல் நீடித்து இருக்கும் ஒருசில தொகுப்பாளர்களில் பெப்சி உமாவும் ஒருவர். இவர் தொகுப்பாளினியாக இருந்த காலத்தில் இவருக்கு மிகப்பெரிய அளவில் பேரும் புகழும் இருந்தது. இவர் எந்த புடவை, எந்த கம்மல் அணிகிறார், பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் கூட்டம் தனியாக இருந்தது. இந்நிலையில் இவர் பிரபலம் அடைந்தததை பயன்படுத்தி பல பாலிவுட், கோலிவுட் முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் இவரை சினிமாவுக்கு நடிக்க அழைத்தனர்.
வந்த அத்தனை அழைப்புகளையும் விருப்பம் இல்லை என்கிற ஒரே காரணத்தை சொல்லி அவர் தட்டிக் கழித்து விட்டார். மேலும் அவருக்கு சினிமாவில் நடிப்பதில் ஆர்வமில்லை எனக்கு எது ஆர்வமும் அதை நான் தெளிவாக செய்கிறேன் என்று அவர் கூறி உள்ளார். மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை பிரபல நாளிதழ் ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டி தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் முத்து படத்திற்கும், பிறகு ஒரு படத்திற்கும், அதன் பின் மீண்டும் ஒரு படத்தில் இவரை நடிக்க அழைத்துள்ளார். ஆனால் இவர் மிகவும் தயக்கத்துடன் அதை மறுத்துள்ளார். ரஜினி பலமுறை இதை உமாவிடம் கூறியுள்ளாராம். நான் கூப்பிட நீங்கள் நடிக்க வரவில்லை என்று கூறியுள்ளாராம்.