பிரபல இசை தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் அஞ்சனா. இவர் தொகுப்பாளினியாக பணிபுரிந்த பொழுது மிகவும் பிரபலமானதொகுப்பாளினிகளில் இவரும் ஒருவராக இருந்தார். இவருக்கு பல சினிமா பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் எந்த வாய்ப்பையும் இவர் ஏற்கவில்லை. தொடர்ந்து தொகுப்பாளினியாகவே பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இவர் கயல் படத்தில் நடித்த நடிகர் சந்திரமவுலி காதலித்தார். இருவரும் பெற்றோரின் சம்மதத்தோடு திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த அஞ்சனா சமீபகாலமாக மீண்டும் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அஞ்சனா தன் கணவருடன் மொட்டை மாடியில் ரொமான்ஸ் செய்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ அந்தப் புகைப்படங்கள்.