பிரபல இசை தொலைக்காட்சியான சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பல வருடங்கள் பணியாற்றியவர் அஞ்சனா. இவருக்கு தொகுப்பாளினியாக இருக்கும் போதே நிறைய பட வாய்ப்புகள் வந்தன.

இருப்பினும் தொகுப்பாளராகவே தொடர்ந்தார். அவருக்கு சிறுவயதிலிருந்தே மாடல் மீது உள்ள பிரியத்தால் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இவர் நடிகர் சந்திரமௌலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் தொகுப்பாளினியாக பணியாற்றிவருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் சரண்டர். தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருந்துகொண்டே இவர் வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர்.

ஆனால் தொடர்ந்து புகைப்படங்ளை வெளியிட்டு வருவதால் நான் அதற்கு அடிமை ஆகிவிடுவேனோ என்று தோன்றுகிறது. இதனை நாள் என் புகைப்படத்திற்கு பாராட்டுகளை தெரிவித்ததிற்கு நன்றி என கூறி பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ப்ளீஸ் இந்த முடிவை நிறுத்தி விடுங்கள் என கெஞ்சி வருகின்றனர்.










