எமிஜாக்சன் தமிழ் சினிமாவில் A .L . விஜய் இயக்கத்தில் ஆர்யா ஜோடியாக “மதராசபட்டினம்” என்ற அப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வந்த எமிக்கு அடித்தது ஜாக்பாட். பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்த “ஐ” என்ற படத்தில்; நடித்து ரசிகர்களின் மனசை மெர்சலாக்கினார். அதனை தொடர்ந்து தளபதி விஜயின் “தெறி” படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.
திருமணத்திற்கு பின் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்த எமி கர்ப்பம் ஆனதும் படங்களில் நடிப்பதை விட்டுட்டு ஓய்வில் இருந்தார். சமீபத்தில் இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்ததை புகைப்படமாக வெளியிட்டு சந்தோத்தில் இருந்தார் எமி. அதன் பின் சில நாட்களில் மறுபடியும் கவர்ச்சி வேட்டையில் இறங்கினர் எமி. இதனை பார்த்த ரசிகர்கள் குழந்தை பிறந்தும் இது போல படங்கள் தேவையா என்று எமியிடம் கேள்விக்கு எழுப்பி வருகின்றனர்.