Thursday, September 10, 2026
-- Advertisement--

வடசென்னையின் யதார்த்த வாழ்க்கையைப் பேசும் ‘ஆல் பாஸ்’

நிறங்​கள் மூன்​று, தருணம் போன்ற படங்​களில் நடித்த துஷ்யந்த் நாயக​னாக நடித்​துள்ள படம், ‘ஆல் பாஸ்’. ஜனனி நாயகி​யாக நடித்துள்​ளார். சரத் லோகித்​ச​வா, ஜெயப்​பிர​காஷ், செந்​தி​கு​மாரி, சுப்​பிரமணிய சிவா, வினோ​தினி என பலர் நடித்​துள்​ளனர்.

ஜேம்ஸ் வசந்​தன் இசை அமைத்​துள்​ளார் ஒன்ஸ் ஸ்டெப் என்​டர்​டெ​யின்​மெண்ட் சார்​பில் மோக​னா.ஆர் தயாரித்​துள்ள இப்​படத்தை மைதீன் இயக்​கி​யுள்​ளார். படம் பற்றி அவர் கூறும்​போது, “வடசென்னை என்​றாலே அடிதடி, வெட்​டு, குத்து, ரத்​தம் என்றே தமிழ் சினி​மா​வில் காட்டி வந்திருக்கிறார்கள்.

இது எது​வுமே இல்​லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்​வியலைப் பேசும் படம் இது. 45 நாட்​கள் முழு படப்​பிடிப்​பை​யும் வடசென்னை மற்​றும் அதன் சுற்​று​வட்​டார பகு​தி​களில் முடித்திருக்​கிறோம். படப்​பிடிப்பு நிறைவு பெற்ற நிலை​யில் இறு​திக்கட்ட பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன” என்றார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles