தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் பாலிவுட் பக்கமும் ரசித்து வருகின்ற நிலையில் பாலிவுட்டில் டாப் நடிகையாக ‘உள்ளவர் ஆலியா பட்.
இவர் பிரபல தயாரிப்பாளரான மகேஷ் பட்டின் மகள் ஆவார். இவர் தந்தை உதவியால் சினிமாவில் நுழைந்தாலும் தற்போது தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார். இவரது அம்மா பாலிவுட்டின் பிரபல நடிகை.
இந்நிலையில் நடிகை ஆலியா பட்டின் வீட்டில் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. அவரது வீட்டின் நீச்சல் குளத்தில் தண்ணீர் குடித்துவிட்டுப் பின்னர் அந்த குளத்தின் ஒரு குளியல் போட்டுவிட்டு புதருக்குள் சென்று உள்ளது. இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் எங்கள் வீட்டில் விருந்தாளி ஒருவர் வந்திருக்கிறார், என கேப்ஷன் கொடுத்து வெளியிட்டுள்ளார். இதை பார்த்த பலரும் இதை நீங்கள் பயப்படவே இல்லையா என கேட்டு வருகிறார். இந்நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.